காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்
மாநில அரசில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட சிறப்புபேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில அரசில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட சிறப்புபேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு பேரவை
விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட கிளை சிறப்பு பேரவை கூட்டம் தலைவர் வியாகத்அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைரவன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ராமர் வரவு செலவு, அறிக்கை வாசித்தார். பின்னர் நிர்வாகிகள் பலர் வாழ்த்தி பேசினர்.
இதனை தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு அறிவித்தது போல 1.12023 முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியின் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணிக்கொடை தொகை வழங்க வேண்டும். ஏற்பளிப்பு விடுப்பு பணப்பலன்களை 1.4.2022 முடிய வழங்க வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சிவஞானம், செயலாளராக வைரவன், பொருளாளராக ராமர், துணைத்தலைவர்களாக வியாகத்அலி, மாரியப்பன், புகழேந்தி, முத்துராமலிங்கம், பாண்டியராஜன், கருப்பசாமி, இணைச் செயலாளர்களாக ராஜ்குமார், ராஜன், நாகப்பன், சரவணன், கங்கை, முத்தரசு, சுப்புக்காளை, மாநில செயற்குழு உறுப்பினர்களாக முனியாண்டி, அந்தோணி ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்ட்டனர்.