பிளாஸ்டிக் இல்லாத முன்னோடி கிராமமாக திகழ வேண்டும்
பிளாஸ்டிக் இல்லாத முன்னோடி கிராமமாக திகழ வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆனைகுளம் பஞ்சாயத்து அருணாசலபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தலைவி பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர், செல்லமணி முன்னிலை வைத்தார். ஊராட்சி சார்பில் போடப்பட்டுள்ள தார் சாலைகளில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களை கேச் வீலுடன் இயக்குவதை விவசாயிகள் கைவிட வேண்டும். ஒரு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நெகிழி இல்லா முன்னோடி கிராமமாக ஆனைகுளம் பஞ்சாயத்து திகழ பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story