பொது பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்;கோபி ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் மனு


பொது பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்;கோபி ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் மனு
x

பொது பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று கோபி ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஈரோடு

கடத்தூர்

பவானி அருகே உள்ள கண்ணாடிபாளையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே பொது பாதையை கிராம மக்கள் முன்னிலையில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரி கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்சினியிடம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.


Next Story