பிரதம மந்திரியின் ஊக்கத்தொகை பெறவிவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும்
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடராம்:
ஓட்டப்பாராம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலாய் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓட்டப்பிடராம் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை ஆண்டுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகையை இந்த ஆண்டும் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது கிராமத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ, தபால் அலுவலகத்திலோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலோ அணுகி பி.எம் கிஸான் இணையதளத்தின் மூலமாக பதிவுகளை வரும் 31-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்களது நிலம், தனிநபர் விபரங்களை தாமதமின்றி பதிவு செய்து தொடர்ந்து ஊக்கத்தொகை பெற்று பயன் பெறலாம், என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story