தொழிலாளர் துறையில் நலத்திட்டங்கள் பெறபிற துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது:உதவி ஆணையர் தகவல்


தொழிலாளர் துறையில் நலத்திட்டங்கள் பெறபிற துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது:உதவி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் துறையில் நலத்திட்டங்கள் பெற பிற துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 16 அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலவாரிய திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு நபர் அரசின் உதவித்தொகையினை இருமுறை பெறுவதை தடுக்கும் பொருட்டு இதில் பயன்பெற விண்ணப்பிக்கும் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பிற துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. எனவே தொழிலாளர்கள் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் இரட்டை பலன் பெறாதிருப்பதை உறுதி செய்தபின்னர் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு அறிவுரைகளை பின்பற்றி, பதிவு பெற்ற தொழிலாளர்கள் இரட்டை பலன் பெறாதிருப்பதை உறுதி செய்யுமாறு தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story