ஒரு மொழியை திணிக்கும் போது மற்ற மொழிகள் அழிந்துவிடும் - ப.சிதம்பரம்

ஒரு மொழியை திணிக்கும் போது மற்ற மொழிகள் அழிந்துவிடும் - ப.சிதம்பரம்
x

ஒரு மொழிதான் ஆட்சி மொழி என்றால் அதனை திணிக்கும் போது மற்ற மொழிகள் எல்லாம் அழிந்துவிடும் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,

ஒரு மொழிதான் ஆட்சி மொழி என்றால் அதனை திணிக்கும் போது மற்ற மொழிகள் எல்லாம் அழிந்துவிடும் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கோவையில் நேற்று நடைபெற்ற கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் விழா, இலக்கியப் பொன்விழா நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, மொழி முக்கியம். மொழியை நாம் கையாள வேண்டும் என்று மட்டும் நான் சொல்லவில்லை. மொழியை நாம் ஆள வேண்டும். மொழி நம்மை ஆள வேண்டும். ஆட்சியில் இல்லாத மொழி அழிந்து விடும்.

இந்தியாவை மனதில் வைத்து சொல்கிறேன், ஒரு மொழி தான் ஆட்சி மொழி என்றால் அந்த மொழியை பரப்ப பரப்ப, திணிக்க திணிக்க மற்ற மொழிகள் எல்லாம் அழிந்து விடும் என்ற அச்சம், எச்சரிக்கை உங்களுக்கு வேண்டும் என்று கூறினார்.

Next Story