பழங்குடியின பாரம்பரியங்கள் குறித்து தெரிந்துகொள்ளசால்வை, சேலைகளில் ஓவியம் வரையும் பழங்குடியின பெண்கள் -வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்
பழங்குடியின பாரம்பரியங்கள் குறித்து தெரிந்துகொள்ள சால்வை, சேலைகளில் ஓவியம் வரையும் பழங்குடியின பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள்.
ஊட்டி
பழங்குடியின பாரம்பரியங்கள் குறித்து தெரிந்துகொள்ள சால்வை, சேலைகளில் ஓவியம் வரையும் பழங்குடியின பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள்.
பழங்குடியின பாரம்பரியங்கள்
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர், பணியர், இருளர், குரும்பா், காட்டு நாயக்கர் என 6 வகை பழங்குடி மக்கள் இன்றளவும் இயன்றவரை தங்களின் பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதில் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையில் கிடைக்ககூடிய தாவரங்கள், வாழ்க்கை முறை, விவசாயம் ஆகியவையை பாறைகளில் வரைந்துள்ளனர்.
சேலைகளில் ஓவியம்
இந்த நிலையில் குன்னூர் புதுக்காடு குரும்பா கிராமத்தில் பழங்குடியின பெண்கள் தற்போது, தனியார் அறக்கட்டளை மூலம் அளித்துவரும் தையல் பயிற்சியில் சேலை, சால்வை உள்ளிட்ட துணிவகைகளில் பாரம்பரிய ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இதேபோல் ஹெட்போன் கவர்களாக தைய்க்கும் துணியிலும் பாரம்பரிய ஓவியம் வரைகின்றனர். இதில் பாறை ஓவியங்களில் வரையப்பட்டுள்ள தேன் எடுப்பது, விவசாயம் செய்வது, இயற்கை வளங்கள் என பலவற்றையும் வரைந்து வருகின்றனர். ஏற்கனவே, பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில் மாற்று பயன்பாடான துணி பைகளில் இந்த ஓவியங்கள் வரைந்துள்ளார்கள். மேலும் அவர்கள், பழங்குடியின மகளிருக்கு இடவசதி ஏற்படுத்தி கொடுப்பதுடன், நிதியுதவி அளித்து தொழில் மேம்பாடு அடைய செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.