போதையற்ற தமிழகமாக மாற்றதிருச்செந்தூரில் ஒருகோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்
போதையற்ற தமிழகமாக மாற்ற திருச்செந்தூரில் ஒருகோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்துர்:
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழகமாக மாற்ற 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்க செயலாளர் ஆசாத் ஜவகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை தாசில்தார் சாமிநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், இந்திரசூடன், வக்கீல்கள் முத்துக்குமார், முத்துவேல், ஆசிரியர்கள் கண்ணபிரான், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story