குற்ற சம்பவங்களை தடுக்க 10 கண்காணிப்பு கேமரா அமைப்பு
முளகுமூடு பேரூராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்க 10 கண்காணிப்பு கேமரா அமைப்பு
கன்னியாகுமரி
தக்கலை,
தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியில் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிக்கு செல்லும் மாணவிகளை சிலர் கேலி-கிண்டல் செய்து வந்தனர். மேலும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான தச்சன்கோடு, மணலி விளை, பண்டாரக்கோணம், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் நமது ஊர் நமது வளர்ச்சி என்ற அமைப்பு மூலம் 10 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. அவற்றை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இயக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் முளகுமூடு பேரூராட்சி தலைவி ஜெனிஷா அஜித் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் ஜெபதுரை, சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story