தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம்


தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம்
x

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்பை, சேரன்மாதேவி ஒன்றிய மாநாடு நடந்தது. ஒன்றிய பொருளாளர் சேக் தலைமை தாங்கினார். மாவட்ட மாதர் சங்க செயலாளர் சபியாள் முன்னிலை வகித்தார். அம்பை ஒன்றிய துணை செயலாளர் பரத்வாஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி பேசினார். முன்னதாக மாநாட்டில் அஞ்சலி தீர்மானத்தை சிவக்குமார், வரவு-செலவு மற்றும் வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஸ்தாபன அறிக்கையை முருகன் ஆகியோர் வாசித்தனர்.

மாநாட்டில், பாபநாசம் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பக்தர்களால் தாமிரபரணி ஆற்றில் போடப்படும் துணிகளை மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிவந்திபுரம் செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட நிர்வாகக்குழு பெரும்படையார், சேதுராமலிங்கம், கிருஷ்ணன், எ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலாளர் சடையப்பன், மாநிலக்குழு வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story