எட்டயபுரத்தில்திருட்டுக்களை தடுக்க விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
எட்டயபுரத்தில்திருட்டுக்களை தடுக்க விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் திருட்டு சம்பவங்களை தடுப்பது தொடர்பாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீஸ்துறை சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் நடந்த கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர் வெங்கடேஷ் ராஜா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
அவர் கூறுைகயில், வர்த்தக சங்கத்தின் சார்பில் பஜார் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும். இரண்டு இரவு நேர காவலர்களை நியமித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியூர் செல்லும் பொழுது வீட்டிற்கு வெளியே பழைய காலணிகளை போட்டு வைத்திருப்பதுடன், வீட்டிற்குள் ஒரு பல்ப்பை எரிய விட வேண்டும்' என ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து வர்த்தக சங்க நிர்வாகிகள் கூறுகையில், 2 இரவு நேர காவலர்களை ஓரிரு வாரங்களில் நியமிப்போம். நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர். சங்க செயலாளர் அய்யனார் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன், முருகன், வர்த்தகர்கள் சங்க பொருளாளர் பரமசிவம், கெளரவ ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியன், சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், ரமேஷ், முனியசாமி, கணேசன் உள்ளிட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்