அறுவடை எந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.1¼ கோடி ஒதுக்கீடு


அறுவடை எந்திரங்கள் கொள்முதல் செய்ய      ரூ.1¼ கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சிறப்பு தேயிலைத்தூள் விற்பனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. தேயிலை அறுவடை எந்திரங்கள் கொள்முதல் செய்வது உள்பட தேயிலை வாரியத்திற்கு ரூ.1¼ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் சிறப்பு தேயிலைத்தூள் விற்பனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. தேயிலை அறுவடை எந்திரங்கள் கொள்முதல் செய்வது உள்பட தேயிலை வாரியத்திற்கு ரூ.1¼ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்தார்.

தேயிலைத்தூள் விற்பனை மையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி பழைய ஆவின் பாலகம் அருகில் தேயிலை வாரியம் சார்பில், சிறப்பு தேயிலைத்தூள் விற்பனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் எம்.முத்துக்குமார், கலெக்டர் அம்ரித் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் கூறியதாவது:-

கோத்தகிரி தாலுகாவில் உள்ள சிறு தேயிலை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், சிறு தேயிலை விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்பை செயல்படுத்தும் முகமையாகவும் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேயிலை வாரியத்திற்கு 2021-2022-ம் ஆண்டில் தமிழக அரசிடம் இருந்து ரூ.1.21 கோடி ஒதுக்கி வழங்கப்பட்டு உள்ளது.

அறுவடை எந்திரங்கள்

இதன் மூலம் சிறு தேயிலை விவசாயிகளுக்கு கவாத்து எந்திரம் மற்றும் அறுவடை எந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கான உதவி, சிறு தேயிலை விவசாயிகள், உதவிக்குழுக்கள் இயற்கை வேளாண்மை மூலம் தயாரிக்கப்பட்ட சிறப்பு தேயிலை விற்பனை மையம் அமைப்பதற்கான சிறப்பு திட்டம் உள்பட 4 கூறுகளில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இயற்கை விவசாய நடவடிக்கைகளை இலக்காக கொண்டு உள்ளது.

இதனால் வழக்கமான தேயிலைகளை விட 3 முதல் 5 மடங்கு அதிக வருவாய் ஈட்டும் இயற்கை வேளாண்மை மூலம் தயாரிக்கப்பட்ட சிறப்பு தேயிலைத்தூளின் தேவையை கருத்தில் கொண்டும், சிறு தேயிலை விவசாயிகளால் விற்பனை மையங்கள் அமைப்பதற்கான சிறப்பு திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேம்பாடு

கோத்தகிரி தாலுகாவில் 3 சிறப்பு தேயிலை விற்பனை மையங்கள் சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் ஒட்டு மொத்த தேயிலைத் தொழிலின் மேம்பாட்டிற்காக திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஆவின் பொது மேலாளர் வெங்கடாச்சலம், குன்னூர் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஷ்வரி, உதவி இயக்குனர் செல்வம், தாசில்தார் ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story