விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்


விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்
x

விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

பயிலரங்கம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்தை தடுப்பது தொடர்பான பயிலரங்கினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். இப்பயிலரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் கிஷோர் குமார், மத்திய அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் (பேரிடர் மேலாண்மை) டாக்டர் திருப்புகழ், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை முதன்மை இணைத்தலைமை அலுவலர் தியாகராஜன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஜெகதீசன், சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெகன் ஆகியோர் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து பேசினர்.

இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்வது குறித்தும், உரிய வழிமுறைகளை பின்பற்றி பட்டாசு தயாரிப்பது குறித்தும் குழு விவாதம் நடைபெற்றது.

மீட்புப்பணிகள்

இந்த குழு விவாதத்தில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தொழில் சார்ந்த கல்வி அறிவோடு பட்டாசு தொழிலை மேற்ெகாள்ள வேண்டும். பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளும் போது விபத்தினை முற்றிலும் தவிர்த்து மாவட்டத்தில் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அவசரகால மருத்துவ ஏற்பாடுகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இறுதியில் அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரி பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் டாக்டர்அரசு சுந்தரம் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story