மங்கலகுறிச்சி மழைநீர் வாய்க்காலில் அமலை செடிகளை அகற்ற எம்.எல்.ஏ. நடவடிக்கை


மங்கலகுறிச்சி மழைநீர் வாய்க்காலில் அமலை செடிகளை அகற்ற   எம்.எல்.ஏ. நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்கலகுறிச்சி மழைநீர் வாய்க்காலில் அமலை செடிகளை அகற்ற ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டியில் இருந்து சிவராமங்கலம், மாங்கொட்டபுரம், பெருங்குளம், மங்கலகுறிச்சி வழியாக வாய்க்கால் அமைக்கப்பட்டு ஆத்தாம்பழம் மடை வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்காலில் பெருங்குளம், மங்கலகுறிச்சி மற்றும் ஆத்தாம்பழம் வரை அமல செடிகள் ஆக்கிரமித்து தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் முறையிட்டு, அமலை செடிகளை அகற்றி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மங்களக்குறிச்சி பகுதிக்கு சென்று வாய்க்காலை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அவர் தொடர்பு கொண்டு வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை பொக்லைன் மூலம் அகற்றி தூர்வார வேண்டும் என நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார். இதற்கு மங்கலகுறிச்சி, பெருங்குளம் பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பெருங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் நவநீதமுத்துக்குமார் உள்பட பல கலந்து கொண்டனர்.


Next Story