சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாலையை சீரமைக்கக்கோரி  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

திருவட்டார்,

காட்டாத்துறை ஊராட்சியில் காட்டத்துறை-வாறுவிளை, பூவன்கோடு-முளகுமூடு, நல்லவிளை-தெற்றை ஆகிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்ககோரி காட்டாத்துறை ஊராட்சி காங்கிரஸ் கட்சி சார்பில் காட்டாத்துறை-வாறுவிளை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காட்டாத்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் டாம் டிக்சன் தலைமை தாங்கினார். திருவட்டார் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், காட்டாத்துறை பேரூராட்சி தலைவர் இசையாஸ், துணைத்தலைவர் ஜெபதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பினுலால் சிங் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், வழக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட கவுன்சிலர்கள் செலின்மேரி, சர்மிளா ஏஞ்சல், மாவட்ட துணைத்தலைவர் ஜாண் சேவியர், மாவட்ட செயலாளர்கள் ஜாண் இக்னேஷியஸ், வர்க்கீஸ், வட்டார துணைத்தலைவர்கள் ஓஸ்டின் ஞான ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story