வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 12 குழுக்கள் அமைப்பு


வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க  12 குழுக்கள் அமைப்பு
x

நாகை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

பருவமழை ஆய்வு கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் பிரதிவிராஜ், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது கூறியதாவது:-

12 குழுக்கள் அமைப்பு

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு வட்டவாரியாக பொறுப்பு அலுவலர்கள் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 11 நபர்கள் வீதம் 1 வட்டத்தில் 33 நபர்கள் அடங்கிய 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதிலும் 132 நபர்கள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 134 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு தேவையான 5 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக்கூடம் 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட தயார்

மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 5 ஆயிரம் முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 200 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.மாவட்டத்தில் கனமழையால் மின்னல் தாக்கி ஒருவர் இறந்துள்ளார். 31 கால்நடைகள் இறந்துள்ளன. 15 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினாா.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து 167 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 More update

Next Story