கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
வேதாரண்யம் பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வேதாரண்யம் தாலுகா அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வேதாரண்யத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது:-
வடிகால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம்
வேதாரண்யம் பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இன்சூரன்ஸ் துறையை அரசே ஏற்று நடத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
வேதாரண்யம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக துணை தாசில்தார் மாதவன் வரவேற்றார். முடிவில் தனித்துறை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.