தங்கப்பல்லக்கு, காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலா


தங்கப்பல்லக்கு, காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலா
x

ராமேசுவரம் கோவில் திருவிழாவையொட்டி தங்கப்பல்லக்கு, காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் 2-வது நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் கோவிலில் இருந்து தங்கப் பல்லக்கில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு தங்ககாமதேனு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் வருகிற 31-ந் தேதி அன்று தேரோட்டமும், 2-ந் தேதி அன்று மாலை மாற்றுதல் நிகழ்ச்சி மற்றும் 3-ந் தேதி அன்று சாமி - அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.


Related Tags :
Next Story