எடப்பாடி அருகே ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி விவசாயியிடம் நூதன முறையில் பணம் திருடிய 2 பேர் கைது உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்


எடப்பாடி அருகே ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி  விவசாயியிடம் நூதன முறையில்  பணம் திருடிய 2 பேர் கைது  உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்
x

எடப்பாடி அருகே ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி விவசாயியிடம் நூதன முறையில் பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமாகி உள்ளது.

சேலம்

சேலம்,

விவசாயி

எடப்பாடியை அடுத்த சின்னமுத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன். இவர், எடப்பாடி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்குள்ள எந்திரத்தை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாத காரணத்தினால் அங்கிருந்த வாலிபர்களிடம் உதவி கேட்டார். அவர்களும் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டனர்.

பின்னர் பணம் எடுக்க முடியவில்லை என்று கூறி ஏ.டி.எம். கார்டை திரும்ப கொடுத்து விட்டனர். முருகனும் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் அந்த நபர்கள், முருகன் வங்கி கணக்கில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் வரை எடுத்துள்ளனர்.

2 பேர் கைது

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விவசாயியிடம் நூதன முறையில் பணம் திருடிய அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த மதியழகன் மகன் ஜீவானந்தம் (22), அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் கதிரவன் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் டிப்ளமோ பட்டதாரிகள் என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

உல்லாச வாழ்க்கை

இந்த போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும், அப்படி கைவரிசை காட்டிய பணத்தில் ஆங்காங்கே விடுதிகளில் அறை எடுத்து தங்கி இருந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story