சாத்தான்குளத்தில் நகை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


சாத்தான்குளத்தில் நகை தொழிலாளிக்கு   அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் நகை தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அழகம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சுப்பிரமணியன் (வயது 62) நகை செய்யும் தொழிலாளி. இவர், சம்பவத்தன்று சாத்தான்குளம் புது வேதக்கோயில் தெருவில் உள்ள நகைபட்டறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சிவப்பு நிற காரில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். நண்பர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குபதிவு செய்து,

அந்த 2 மர்ம நபர்களை தேடிவருகிறார்.


Next Story