நாகர்கோவிலில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.24½ லட்சம் மோசடி; நண்பர் கைது


நாகர்கோவிலில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.24½ லட்சம் மோசடி; நண்பர் கைது
x

நாகர்கோவிலில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.24½ லட்சம் மோசடி செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.24½ லட்சம் மோசடி செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன் (வயது 53). இவர் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் மீனாட்சிபுரத்தில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளேன். காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (41). தொழில் சம்பந்தமாக தங்கப்பன் எனக்கு பழக்கமாகி நண்பர்கள் ஆனோம். அவர் என்னிடம் தங்க நகைகளை வாங்கி, விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு தேவைப்படுவதாக தங்கப்பன் என்னிடம் இருநது 482 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை வாங்கி சென்றார். இதற்கு மாறாக உடனே ரூ.24½ லட்சம் தருவதாக கூறினார். பின்னர் தங்கப்பனை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் தங்கப்பன் என்னிடம் நகை மோசடி செய்தது தெரியவந்தது. எனவே நகையை மீட்டு தந்து தங்கப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தங்கப்பனை போலீசார் கைது செய்தனர்.


Next Story