தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த பச்சை பெருமாள் மகன் மாக்கான் லட்சுமணன் என்ற லட்சுமணன் (35), தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தனபாண்டி மகன் செல்வகணேஷ் (22) ஆகியோர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாக்கான் லட்சுமணன், செல்வகணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான மாக்கான் லட்சுமணன் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.