வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

வக்கீல் மீது தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 2017-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில ஈடுபட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.மோதலின் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளராக இருந்த வக்கீல் வேலு குபேந்திரனை அப்போதைய சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு துரத்தி சென்று தாக்கி கைது செய்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

இதுகுறித்து சென்னை மனித உரிமை ஆணையத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த நிலம், நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் விஷ்ணு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வக்கீல் கென்னடி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.அந்த தீர்ப்பில் பொதுவெளியில் வக்கீல் வேலுகுபேந்திரன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது மனித உரிமைக்கு எதிரானது. அவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

மேலும் அந்த தொகையினை தமிழக அரசு, வக்கீல் வேலு குபேந்திரனுக்கு கொடுத்துவிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.சிங்காரவேலு தற்போது பொறையாறு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story