மாணவியிடம், நர்சிங் கல்லூரி தாளாளர் 'வீடியோகால்' மூலம் ஆபாச பேச்சு


மாணவியிடம், நர்சிங் கல்லூரி தாளாளர்  வீடியோகால் மூலம் ஆபாச பேச்சு
x

அருப்புக்கோட்டையில் மாணவியிடம் நர்சிங் கல்லூரி தாளாளர் வீடியோ காலில் ஆபாசமாக நடந்துெகாண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி அக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, தாளாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் மாணவியிடம் நர்சிங் கல்லூரி தாளாளர் வீடியோ காலில் ஆபாசமாக நடந்துெகாண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி அக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, தாளாளர் கைது செய்யப்பட்டார்.

வீடியோ காலில் ஆபாசம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ்(வயது 48) என்பவர் சில மாதத்துக்கு முன்பு அதே கல்லூரிைய சேர்ந்த ஒரு மாணவியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கல்லூரி தாளாளர், வீடியோ காலில் ஆபாசமாக பேசி நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த மாணவியிடம் கல்லூரி தாளாளர் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களிடையே பரவியது. இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே நடவடிக்கைக்கோரி போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது.

கல்லூரி தாளாளர் கைது

இது பற்றி தகவல் அறிந்ததும் நேற்று காலை கல்லூரி மூடப்பட்டது. எனவே கல்லூரி வாசலில் அமர்ந்து மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியிடம் போனில் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி தாளாளரை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கல்லூரி தாளாளரை கைது செய்ய வேண்டும் என மாணவர் தரப்பில் வலியுறுத்தினார்கள். இதற்கிடையே அருப்புக்கோட்டை டவுன் போலீசார் இது தொடர்பாக கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்தனர்.

சாலை மறியல்

எனினும் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், கல்லூரி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் திருப்பித்தர வலியுறுத்தி திடீரென அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மாணவ-மாணவிகள், பெற்றோர் மறியலில் ஈடுபட்டதால் மதுரை-விருதுநகர் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், தாசில்தார் அறிவழகன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கைதான கல்லூரி தாளாளரிடம் விசாரணை நடந்து வருகிறது, இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story