டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணையவழி கவிதைப்போட்டி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணையவழி கவிதைப்போட்டி 17-ந் தேதி நடக்கிறது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணையவழி கவிதைப்போட்டி கருத்தரங்கம் வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த இணையவழி கவிதை கருத்தரங்கம் "Scope of Mechanical Engineering" என்ற தலைப்பில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம்.
எந்திரவியல் துறை படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தகவல்களை இக்கருத்தரங்கில் பெற்றுக்கொள்ளலாம்.
இக்கருத்தரங்கில் எந்திரவியல் துறையை சார்ந்த உதவி பேராசிரியர் சிதம்பர தாணு உரையாற்றுகிறார். இதற்கான பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
இதில் பங்கேற்க https://forms.gle/k, https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"2, "https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"yu, "https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"1, "https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"crWnyw, "https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"8, "https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"TcDY, "https://forms.gle/k2yu1crWnyw8TcDY6"6 என்ற தொடர்பினை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும், மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களை அறிவதற்கும் "http://www.drsacoe.org/"www.drsacoe.org என்ற கல்லூரியின் இணையதளத்திலும் 94455 69997 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை, கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில் எந்திரவியல் துறை தலைவர் மணிராம் குமார், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.