லெமூர் கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் கேமரா திருட்டு
லெமூர் கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் கேமரா திருட்டு போனது.
கன்னியாகுமரி
ராஜாக்கமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் பிச்சைராஜா (வயது33). இவர் தனது நண்பர்களுடன் கணபதிபுரம் அருகே உள்ள லெமூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்தார். அப்போது தான் கொண்டு வந்த டிஜிட்டல் கேமரா மூலம் அங்குள்ள பகுதிகளை புகைப்படம் எடுத்தார். பின்பு கேமராவை தான் வந்த காரில் வைத்துவிட்டு மீண்டும் கடலின் அழகை ரசிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து காரில் பார்த்த போது கேமராவை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் காரின் கதவை திறந்து கேமராவை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம். இதுகுறித்து பிச்சைராஜா ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேமராவை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story