கப்பலில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி


கப்பலில் வேலை என கூறி வாலிபரிடம்     ரூ.2 லட்சம் மோசடி
x

கப்பலில் வேலை என்று கூறி ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

கப்பலில் வேலை என்று கூறி ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கப்பலில் வேலை

ராமநாதபுரம் ரோஸ்நகரை சேர்ந்தவர் தக்கலை பீர்முகம்மது என்பவரின் மகன் முகம்மது அப்துல்அப்பாஸ் (வயது21). மெரைன் பொறியியல் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக கூகுளில் தேடிப்பார்த்துள்ளார். அப்போது கப்பலில் வேலை வாய்ப்பு என்றும் சேர விரும்புபவர்கள் தங்களின் சுய விவரங்களை அனுப்பி வைக்கும்படி இருந்த தகவலை பார்த்து தனது விவரங்களை அனுப்பி வைத்துள்ளார்.

ஓரிருநாளில் அவரது மின்னஞ்சலுக்கு கப்பலில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த வேலையில் சேர நிறுவனத்தினர் தெரிவித்துள்ள வங்கி கணக்கிற்கு பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்டபடி கப்பலில் வேலை என்று நம்பி பணத்தினை அனுப்பி உள்ளார். இவ்வாறு கூகுள் பே மூலம் பல தவணைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் செலுத்தி உள்ளார்.

போலீசில் புகார்

பணத்தினை கொடுத்த நிலையில் முகம்மது அப்துல் அப்பாஸ் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டபோது சரியான பதில் தெரிவிக்காமல் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.பணத்தினை கொடுக்க மறுத்து வேலை தொடர்பான விவரங்களை கேட்டபோது இணைப்பை துண்டித்து அவரது செல்போன் எண்ணை தடை செய்துவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த முகம்மது அப்துல்அப்பாஸ் இணையதளத்தில் தேடிபார்த்தபோது அவர்கள் போலி நபர்கள் என்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகம்மது அப்துல்அப்பாஸ் இதுகுறித்து சைபர்கிரைமில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story