குற்ற சம்பவங்களில் பயன்படுத்துவதை தடுக்க வாகனங்களை வாங்கி செல்பவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை


குற்ற சம்பவங்களில் பயன்படுத்துவதை தடுக்க வாகனங்களை வாங்கி செல்பவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்  போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை
x

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் பயன்படுத்துவதை தடுக்க வாகனங்களை ஏமாற்றி வாங்கி செல்பவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான கடத்தல், சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மதுவிலக்கு குற்றவாளிகள் மீது மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட குற்ற செயல்களில் ஈடுபடும் மதுவிலக்கு குற்றவாளிகள், மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக மதுபானங்களை கடத்தி வரும் நபர்களை கைது செய்து வாகனங்களை கைப்பற்றி விசாரணை செய்யும்போது பெரும்பாலும் கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் அந்த நபர்கள் அருகில் உள்ள கடைக்கோ, வெளி வேலைக்கோ தேவையென பொய்யான காரணங்களை கூறி வாகனங்களை எடுத்து வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரியவருகிறது.

வாகன உரிமையாளர்களுக்கு அறிவுரை

இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கைக்கு எடுக்கும் போது உட்பட்டு உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அவர்களது வீட்டின் அருகில் உள்ளவர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடம் கொடுக்கும்போது விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.


Next Story