புதுப்பேட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புதுப்பேட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர்
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜெயந்தி, காவலர்கள் வைத்தியநாதன், ஜெகன் ஆகியோர் புதுப்பேட்டை கடைவீதி, அம்மாபேட்டை, அங்குசெட்டிபாளையம், சிறுவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிறுவத்தூர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குப்பன் மகன் பரந்தாமன் (வயது 39), அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் கூத்தன் மகன் ராமலிங்கம் (52) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 25 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story