80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

மதுரை நகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தெப்பக்குளம் மாரியம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுபோல், தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைபொருட்கள் பதுக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story