சரக்கு வேனில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது


சரக்கு வேனில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது
x

சரக்கு வேனில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்:

புகையிலை பொருட்கள்

ஓமலூர் அடுத்த கோட்ட மேட்டுப்பட்டி பகுதியில் சரக்கு வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பாக்குகள் மூட்டை, மூட்டையாக கடத்தி கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கோட்ட மேட்டுப்பட்டியில் கரைமேடு என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனில் சோதனை நடத்திய போது, அதில் 30 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து சரக்கு வேனுடன் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

இதில் வீரபாண்டி அண்ணா நகர் சின்ன சீரகாபாடி பகுதி சேர்ந்த சரக்கு வேன் உரிமையாளர் நசீர்வுதீன் (வயது 46), கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் குமார் (30) ஆகிய 2 பேரும் புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதை தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story