புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செட்டித்தாங்கள் அருகே உள்ள பெட்டிக்கடையை சோதனை செய்தபோது அங்கே விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடை உரிமையாளரான திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 345 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story