புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

ஜெயங்கொண்டம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்குந்தபுரம் முதல் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 42) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த 150 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story