புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார்அந்தப் பகுதியில் உள்ள பெட்டி கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்ற செல்வராஜ் (வயது 51) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக புன்னம்சத்திரம் ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த குணா (35) என்பவர் மீதும், அதே பகுதியில் ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக உப்புபாளையம் இந்திராநகர் காலனி சேர்ந்த மணி (40) என்பவர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story