புகையிலை பொருள் விற்பனை செய்தவர் கைது
மணல்மேடு அருகே புகையிலை பொருள் விற்பனை செய்தவர் கைது
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள கடலங்குடி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). இவர் கடலங்குடி கடைவீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் கடலங்குடி கடைவீதியில் சோதனை நடத்தினர். அப்போது முனுசாமி கடையில் நடந்த சோதனையில் அவரது கடையில் இருந்த 4 பாக்கெட் புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அதை கைப்பற்றினர். தொடர்ந்து இதுகுறித்து முனுசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire