புகையிலை விற்ற கடைக்கு 'சீல்'
புகையிலை விற்ற கடைக்கு ‘சீல்’
கூடலூர்
கூடலூர் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் கூடலூர்- கள்ளிக்கோட்டை சாலையில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டுபிடித்து பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கும் பரிந்துரை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் கடையில் சீல் வைப்பதற்கான அனுமதியை பெற்றனர். பின்னர் கூடலூர் ஆர்.டி.ஓ. குதரத்துல்லா முன்னிலையில் மாவட்ட உணவு நியமன அலுவலர் சுரேஷ், கூடலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.