புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது


புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
x

கண்டமனூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கண்டமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் தேனி-வருசநாடு சாலையில் எம்.சுப்புலாபுரம் விலக்கில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த தேனியை சேர்ந்த பெரியபாண்டி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 பண்டல் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story