புகையிலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


புகையிலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில் புகையிலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு கடந்த ஆண்டு முற்றிலும் தடை விதித்தது. இதனால் கும்பகோணம் பகுதியில் இயங்கி வந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மெல்லும் புகையிலை மீதான தமிழக அரசின் தடையை நீக்க வலியுறுத்தியும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சி.ஐ.டி.யு. நிர்வாகி கண்ணன் தலைமையில் புகையிலை தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story