புகையிலை விற்றவர் கைது


புகையிலை   விற்றவர் கைது
x

வெள்ளிச்சந்தை அருகே புகையிலை விற்றவர் கைது

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று வெள்ளமோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தனியார் கல்லூரி அருகே சென்ற போது அங்கு ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கண்டன்விளை மேல்பாறையை சேர்ந்த மகா விஷ்ணு (வயது37) என்பதும், தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 பாக்கெட் போதை புகையிலை மற்றும் ரூ.4,824 யை பறிமுதல் செய்தனர்.


Next Story