இன்று முதல் பகுதி பகுதியாக மின் நிறுத்தம்


இன்று முதல் பகுதி பகுதியாக மின் நிறுத்தம்
x

திருக்கோவிலூர் மணலூர்பேட்டை கண்டாச்சிபுரம் பகுதிகளில் இன்று முதல் பகுதி பகுதியாக மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் உயர் மின்னழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை மேற்படி துணை மின்நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பகுதி பகுதியாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டை தேவரடியார்குப்பம் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் உயர் மின்னழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை(செவ்வாய்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை துணை மின் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை பகுதி பகுதியாக மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம், காரனைபெரிச்சானூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் உயர் மின்னழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் நாளை(செவ்வாய்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை துணை மின் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story