கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது, வீர தீர செயல்புரிந்த தமிழகத்தை சார்ந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதினை பெறுவதற்கு சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது. இந்த விருதுக்கான விவரங்களை https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்களை விரிவான தன் விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந்தேதிக்கு முன்பாக இணையதளம் மூலமாக அனுப்பி வைக்கப்படவேண்டும் அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், கரூர் என்ற அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்கள் மற்றும் உரிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.