இன்று மின்தடை
கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வளையப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், புதுப்பட்டி, கிருஷ்ணன்கோவில், பூவாணி, அழகாபுரி, தொட்டியபட்டி, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, கோட்டையூர், மகாராஜபுரம், கொடிக்குளம், அமைசியா புரம், ராமசாமியாபுரம், கான்சாபுரம், பிளவக்கல், கோவிலாறு, அத்தி கோவில், கொடிக்குளம், தம்பி பட்டி, ராமச்சந்திராபுரம், சுந்தரபாண்டியம், மலையன்குளம், மீனாட்சிபுரம், தைலாபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.
Related Tags :
Next Story