தஞ்சையில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
பழுதான மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் தஞ்சையில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்;
பழுதான மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் தஞ்சையில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்கம்பங்கள் மாற்றும் பணி
தஞ்சை நகர மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் உயர்அழுத்த மின்பாதையில் பழுதான மின்கம்பம் மாற்றப்பட்டு புதிதாக நடும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதனால் சுந்தரம்பிள்ளை நகர், புண்ணியமூர்த்தி தோட்டம், வடக்குவாசல் நாலுரோடு, குதிரைக்கட்டி தெரு, வேலூர் தெரு, பரத் நகர், குளத்துமேட்டுத் தெரு, வாணிய தெரு, கீரைக்கார தெரு, கொடைக்காரத் தெரு, சேர்வைக்கார தெரு. கரந்தை மார்க்கெட் போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மின் வினியோகம் நிறுத்தம்
மேலும் மானோஜிப்பட்டி, திருவேங்கட நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், ராம்கோ கார்டன் பாஸ்கரபுரம், கரூப்ஸ் நகர் போன்ற பகுதிகளிலும், மாதாக்கோட்டை பழைய கோவில் தெரு, திருவள்ளுவர் 3-ம் தெரு, 4-ம் தெரு, ஜெயேந்திர சரஸ்வதி நகர் போன்ற பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பொது மக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.