இன்று மின் நிறுத்தம்
நீடூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே நீடூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாநல்லூர், பொன்மாசநல்லூர் ஆகிய பகுதிகளுக்கும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாாியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story