இன்று மின்தடை
அருப்புக்கோட்டை, பரளச்சி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
காரியாபட்டி,
அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜெயராம் நகர் மேற்கு, கிழக்கு, ராமலிங்கா ஸ்பின்னர்ஸ், என்.ஜி.ஓ. காலனி, ஜெயலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
அதேபோல பரளச்சி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நெடுங்குளம், கே.செட்டிகுளம், கணக்கி, பாறைக்குளம், உடைய நாதபுரம், நல்லாங்குளம், வண்ணாத்தியேந்தல், பரளச்சி, சேலையூர், கொள்ளங்குளம், செங்குளம், புல்லாங்கால், புரசலூர், கீழ்குடி வாகைக்குளம், கள்ளக்காரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.