தமிழகம் முழுவதும் இன்று 10 ஆயிரம் யோகா முகாம்கள் பா.ஜ.க. அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று (செவ்வாய்க்கிழமை) யோகா தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் மத்திய மந்திரிகள், தேசிய மற்றும்தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அதன்படி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி ஆகியோர் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே நடைபெறும் யோகா முகாமில் கலந்துகொள்கின்றனர். மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி, தஞ்சாவூர் கோவிலில் நடைபெறும் யோகா முகாமிலும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் யோகா முகாமில் மத்திய வெளியுறவு, கலாசாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.