ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம், தா.பழூர் துணை மின் நிலையம், உடையார்பாளையம் துணை மின் நிலையம் மற்றும் தழுதாழைமேடு துணை மின் நிலையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, வடவீக்கம், குருவாலப்பர்கோவில், விழப்பள்ளம், பிச்சனூர், வாரியங்காவல், தேவனுர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையும், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர். கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம். நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி. கோடங்குடி, அருள்மொழி. வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) காலை 9. மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.