<
முகப்பு செய்திகள் மாநில செய்திகள்
இன்றைய புகைப்படத்தொகுப்பு (27-07-2022)
சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்கவிழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை செஸ் காய்களின் அணிவகுப்புடன் உற்சாகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் விழுந்ததை ஒட்டி அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றது.
தேவாலா பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் மற்றும் முதுமலையில் இருந்து கூடுதல் வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது.
தூத்துக்குடி பனிமயமாதா கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
கொல்லிமலையில் சமீபத்தில் பெய்த மழையால் சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்ம சமுத்திரம் ஏரி நிரம்பியது.
பெரம்பூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் 6400 சதுர அடியில் பிரம்மாண்ட செஸ் போர்டு அமைக்கப்பட்டு அதில் செஸ் காய்கள் போன்ற தோற்றத்தில் மாணவ- மாணவிகள் நின்றனர்.
புலியூரில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் வழியில் உள்ள ஒரு வயலில் கால்நடை தீவன பயிரின் இடையே ஊடுருவியுள்ள களைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
7 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்கவிழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை செஸ் காய்களின் அணிவகுப்புடன் உற்சாகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Next Story