கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கயத்தாறு:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கயத்தாறு சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.40 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5-ம், லாரிகளுக்கு ரூ.20-ம், 3 ஆக்சில் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.30-ம், மல்டி ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள் ஒரு முறை கடந்து செல்ல ரூ.120-ம், அந்த வாகனங்கள் 24 மணி நேரத்துக்குள் சென்று விட்டு திரும்பி வருவதற்கு ரூ.180-ம், மாத கட்டணமாக (50 தடவை செல்ல) ரூ.4,030-ம் என உயர்த்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் கணிசமாக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வால் விலைவாசி உயரும் என்றும், எனவே கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.