சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதிவாசிபோல் வேடமிட்டு போராட்டம்
சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதிவாசிபோல் வேடமிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் வராதநிலையில், இவர்களது போராட்டம் 47-வது நாளான நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. சுங்கச்சாவடி உழியர்கள் தினமும் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் இலை தழைகளை உடலில் கட்டிக்கொண்டு ஆதிவாசிபோல் வேடமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story